ஆபத்தான நிலையில் மின்மாற்றி : சீரமைக்க கோரிக்கை
திருச்சி, பிப். 16 திருச்சி,உறையூர் குழுமணி செல்லும் சாலையில் காசி விளங்கி மீன் மார்க்கெட் அருகே உள்ள மயானத்திற்கு செல்லும் வழிக்கு முன்பு உள்ள டிரான்ஸ்பார்மர் எப்போது வேண்டுமானலும் உடைந்து விழக்கூடிய மிக ஆபத்தான நிலையில் உள்ளது. இது விழுந்து உயிர் சேதம் ஏற்படும் முன்பு உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்து முன்னணி பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.