திருச்சி விமானநிலையத்தில் ரூ. 7.82 லட்சம் சிகரெட் பறிமுதல்
திருச்சி, ஜன.28 சார்ஜாவில் இருந்து, திருச்சி விமானநிலையத்துக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று முன்தினம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, பயணி ஒருவரது நடத்தையில் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரது இரு உடைமைகளை தீவிர சோதனைக்குட்படுத்தினர். அதில், ஏராளமான சிறிய அட்டை பெட்டிகளில் வெளிநாட்டு சிகரெட் பாக்கெட் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அதிகாரிகள், அவற்றை பறிமுதல் செய்து, கணக்கிட்டதில், ஒரு உடைமையில் 250 பெட்டிகளில் 50 ஆயிரம் சிகரெட்டுகளும், மற்றொரு உடைமையைில், 8 பெட்டிகளில் 1600 சிகரெட்டுகளும் என இந்திய மதிப்பில் மொத்தம் ரூ. 7.82 லட்சம் என தெரிய வந்தது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து, விசாரித்து வருகின்றனர்.