திருச்சி மத்திய அரசு வழக்கறிஞர்கள் கூட்டம் நடைபெற்றது
திருச்சி, நவ.3 தமிழகம் முழுவதும் உள்ள மத்திய அரசு வழக்கறிஞர்கள் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது, இதில் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட தமிழக முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் மத்திய அரசு வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
மத்திய அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் செயல்பாடு குறித்தும் மற்றும் மத்திய அரசுக்கு எவ்வாறு உறுதியாக இருப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. வருங்காலத்தில் வரும் சட்ட சிக்கல்கள் மற்றும் தேர்தல் இப்போது வரக்கூடிய சட்ட சிக்கல்கள் போன்றவற்றையும், தேர்தல் ஆணையத்தில் விதிமுறைகளில் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்துவது குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம், மருத்துவர்கள் பாதுகாப்புக்கு சட்டம் உள்ளது போல வழக்கறிஞர் பாதுகாப்புக்கு சட்டம் வேண்டும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு கவலைக்குரியதாக உள்ளது சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் சென்ற கார் மோதி அதில் பாதிக்கப்பட்ட வழக்கறிஞரை பார் கவுன்சிலில் சென்று தாக்கியது குறித்து அரசிடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஆனால் பாதிக்கப்பட்ட ராஜீவ் காந்தி என்ற வழக்கறிஞர் மீது வழக்கு தொடர்ந்த அவலமான அரசு தற்போது நடந்துகொண்டிருக்கிறது.
அமலாக்கத்துறை விசாரணையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வேறு வழக்கு ஏதேனும் தொடர்பு அல்லது மோசடி குறித்து கண்டறிந்தால் அந்த தகவலை உள்ளூரில் உள்ள இன்வேஸ்டிகேஷன் ஏஜென்சிக்கு தரவேண்டும் என சட்டம் 66 குறிப்பிடுகிறது, 888 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டதாக ஆவணங்கள் அனைத்தும் எடுத்துக்கொள்ளப்பட்டு, சிபிஐ வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உள்ளூர் விசாரணை குழுவிற்கு அனுப்பியுள்ளனர், ஆனால் எந்த ஒரு அரசாங்கமாக இருந்தாலும் அமலாக்கத்துறை அனுப்பியுள்ள தகவலை கொண்டு வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆனால் திமுக அரசு எவ்வாறு நடவடிக்கை எடுக்கும், இது தொடர்பாக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் உன்னுடன் கலந்து கொண்டு அவர் உத்தரவின் பேரில் கண்டிப்பாக பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு நீதிமன்றத்தை அணுகி மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டையும், ஊழல் நடந்ததையும் என்றைக்கும் விடமாட்டோம்