திருச்சி மாவட்ட இல்ல குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி…

0 251
Stalin trichy visit

இந்தியன் மருத்துவ குழந்தைகள் நலக்குழுமம் மற்றும் இந்தியன் அகாடமி ஆப் பிடியராட்டிஸ் சார்பில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் திருச்சி மாவட்ட
இல்ல குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைவர் டாக்டர் ராகவன் அவர்கள் தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் தங்கவேல் முன்னிலை வகித்தார். முன்னாள் தலைவர் டாக்டர் சுனில் சீனிவாசன் வரவேற்று பேசினார். இல்ல குழந்தைகளுக்கு வழங்கப்படும் விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி குழந்தைகள் உடலளவில்,மன அளவில் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கும் விளையாட்டு துறையில் சாதனை படைப்பதற்கான வழிகாட்டுதல்கள் குறித்து குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் முனைவர் பிரபு, சியாமளா, பவுலின், நேத்தலிக் மற்றும் நிறுவனம் சார்ந்த பாதுகாப்பு அலுவலர் ஜெயசித்ரா,சேவை சைட்லைன் 1098 இணை இயக்குனர் சுதா ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். குழந்தைகள் நலக்குழு தலைவர் மோகன் நன்றி கூறினார். ஒவ்வொரு குழந்தைகள் இல்லத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.