திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் இம்மானுவேல் சேகரனார் படத்துக்கு மலர் தூவி மரியாதை

0 167
Stalin trichy visit

திருச்சி செப்.11  சுதந்திரப் போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 68-வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக.சார்பில் மாநகர் மாவட்ட அலுவலகத்தில் அவரது படத்திற்கு மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில்  அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல், மாவட்ட துணைச் செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், பொருளாளர் ராஜசேகரன், இளைஞரணி மாவட்ட செயலாளர் ரஜினிகாந்த்,திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவரும், மீனவரணி மாவட்ட செயலாளருமான கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி, தகவல் தொழில் நுட்ப பிரிவு வெங்கட் பிரபு, இலக்கிய அணி பாலாஜி, தொழிற்சங்கம் ராஜேந்திரன், சிறுபான்மை பிரிவு அப்பாஸ், பகுதி செயலாளர்கள் அன்பழகன், எம்.ஆர்.ஆர். முஸ்தபா, என்.எஸ். பூபதி, புத்தூர் ராஜேந்திரன், கலைவாணன், வாசுதேவன்,மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் பொன்னர், முன்னாள் மகளிரணி மாவட்ட செயலாளர் தமிழரசி சுப்பையா, மீனவரணி ஆதவன், மாவட்ட பிரதிநிதி புகழேந்திரன், பாலக்கரை சத்திவேல், பேராசிரியர் தமிழரசன்,எடமலைப்பட்டிபுதூர் வசந்தகுமார்,வசந்தம் செல்வமணி, நாட்ஸ் சொக்கலிங்கம், தில்லைநகர் முருகன், கே.பி. கண்ணன், ஐடி. பிரிவு நாகராஜ், வெல்லமண்டி கண்ணியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.