கதர் ஆடை அணிந்து பணிக்கு வந்த திருச்சி சித்த மருத்துவத்துறை பணியாளர்கள்!
கைத்தறி மற்றும் நெசவு தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில் வாரம் இரண்டு நாள் அரசு துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் கதர் ஆடைகளை அணிய வேண்டும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.
அதன்படி திருச்சி மாகத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சித்த மருத்துவ துறையில் பணியாற்றிவரும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கதர் ஆடைகளை அணிந்து இன்று பணிக்கு வந்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், இந்தியாவில் கதர் என்றாலே அதற்கு தனி மவுசு உண்டு.

அதிலும் வெள்ளை கதர் ஆடைக்களுக்கு தனி இடம் உண்டு. இது வெறும் ஆடை என்பதோடு மட்டும் அல்லாமல் அது நம் விடுதலை இயக்கத்தின் ஒரு நினைவுச் சின்னமாக திகழ்ந்து வருகிறது. தற்போது கைத்தறி மற்றும் நெசவு தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில் வாரம் இரண்டு நாள் அரசு துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் கதர் ஆடைகளை அணிய வேண்டும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் கதர்ஆடை அணிந்து இன்று பணிக்கு வந்துள்ளோம் என்றனர்.