திருச்சி தெற்கு மாவட்ட கிழக்கு மாநகர பொது உறுப்பினர்கள் கூட்டம்
திருச்சி, செப். 2 திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகரத்தில் இரண்டாவது பொது உறுப்பினர்கள் கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி பங்கேற்பு
கழகத் தலைவர்அறிவுறுத்தலின்படி, 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்ட மன்ற பொது தேர்தலில் 200க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற இலக்கை நோக்கி திருச்சி தெற்கு மாவட்ட கிழக்கு மாநகர கழகத்தின் சார்பாக, இரண்டாவது பொது உறுப்பினர்கள் கூட்டம் இன்று 02.09.2024 திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநகர கழகச் செயலாளர் – மு.மதிவாணன் தலைமை உரைஆற்றினார் மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் பகுதி கழகச் செயலாளர் நீலமேகம் தர்மராஜ் மோகன் பாபு ராஜ்முகமது விஜயகுமார் மணிவேல் சிவக்குமார் மாநகர கழக நிர்வாகிகள் நூர்கான் தமிழ்ச்செல்வன் சந்திரமோகன் பொன்செல்லையா சரோஜினி
மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, வட்ட, கழக செயலாளர்கள்- நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாவட்ட பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்
இரண்டாவது பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
தீர்மானம் 1
தலைமைக் கழகத்தின் அறிவிப்பின்படி முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 111 நிகழ்ச்சிகள் நடத்தியதற்காகவும், அதில் முத்தாய்ப்பாக திருச்சி தெற்கு மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையினை நிறுவியமைக்காகவும் கழகத் தலைவர் அவர்களின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் 16.08.2024 அன்று நடைபெற்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் கழக தலைவர் அவர்களால் நமது மாவட்டக் கழகச் செயலாளர் அவர்கள் பாராட்டப்பட்டார். “கழகத்தின் மாவட்டச் செயலாளர் என்றால் மாவட்ட ஆட்சியருக்கு சமம்” என்ற புரவலர் அன்பில் அவர்களின் முழக்கத்தை மேற்கோள் காட்டி மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களைப் பாராட்டிய கழகத் தலைவர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 2:
திருச்சி தெற்கு மாவட்டத்தில் திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதியில் மதுரை, கோவை போன்ற பெருநகரங்களுக்கு அடுத்ததாக திருச்சியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க ஒப்புதல் வழங்கி, திருச்சி மாவட்ட மக்கள் இளைஞர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிக்க கொடுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், இந்நூலகத்தை திருச்சி மாவட்டத்திற்கு பெற்று கொடுத்த மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கும் நன்றி தெரிவித்து ஒருமனதாக தீர்மானம் நிறை வேற்றப்படுகிறது.
தீர்மானம் 3:
திருச்சி கிழக்கு, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் பாரளுமன்ற தேர்தலில் அதிகமான வாக்குகளை அளித்த பொதுமக்களுக்கும், அதற்காக அல்லும் பகலும் உழைத்த மாவட்ட கழக செயலாளர் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட
அனைவருக்கும் பாராட்டியும், நன்றியும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 4:
தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் கழக தலைவர் அவர்கள் வெளிநாடு சென்று தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெரும் நோக்கில் தொழில் முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முறையான முன்னெடுப்புகளை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 5:
மாண்புமிகு,கழக இளைஞர் அணி செயலாளர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பெரும் முயற்சியால் உலகத்தரம் வாய்ந்த கார் ரேஸ் பந்தயம் (Formula 4) சென்னையில் நடத்திட பெரும் முயற்சி எடுத்து நடத்தி காட்டியமைக்கு பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
அமைச்சர் அன்பில் மகேஸ பொய்யாமொழி யின்உரை
உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு இந்த கார் பந்தயத்தை நடத்தி உள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
கல்வி தொகையை மத்திய அரசு விடுக்கவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றம். அந்த நிதியை விடுவித்தால் பல லட்சம் மாணவர்களும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்தத் தீர்மானத்தை அமைச்சர் அவர்கள் கூட்டத்தினரின் முழு ஒப்புதலுடன் இணைத்துக் கொண்டார்
தேசிய கொள்கையில் மும் மொழி கொள்கை, அண்ணாவின் கொள்கை இரு மொழி கொள்கைதான்.
மும்மொழிக் கொள்கையில் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்க பார்க்கிறார்கள்.
தர வேண்டிய பணத்தை கொடுக்க வேண்டும் என்றால் ஹிந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு செயல்படுகிறது.
எதிரிகளை ஓட ஓட விரட்டும் பணியில் மாநகர் பகுதியினர் செயல்பட வேண்டும்.
கலைஞர் ஆர்மி என்ற ஒரு அணியை உருவாக்கி உள்ளோம் இந்த பெயரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான் பரிந்துரைத்தார். நடிகர் நடித்த படங்கள் பெயரை கேட்டால் சரியாக சொல்லும் இளைஞர்கள் தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெயர் கேட்டால் தெரியாது. அதனை நாம்தான் பயில்விக்க வேண்டும். அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை ரூபாய் ஆயிரத்தை வழங்கி விட்டோம் என்றால் 234 தொகுதிக்கு 234 தொகுதி வெற்றி பெற்று விடுவோம் என கூறினார்