திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் : அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
திருச்சி தெற்கு மாவட்டத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம் !
மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு!
கழகத் தலைவர் – தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை தொடர்ந்து, திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் 22/02/2026 ஞாயிற்று கிழமை மாலை 4 மணிக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர,பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட, மாநகர அணிகளின் அமைப்பாளர்கள், தவறாமல் கலந்து கொள்ளுமாறு மாவட்ட செயலாளர், அமைச்சர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.