திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

0 401
Stalin trichy visit

திருச்சி, செப்.3  திருச்சி புறநகர் அதிமுக  தெற்கு மாவட்டநிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்  திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆக.30 அன்று  அன்று தலைமை கழகத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்,  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி   வழங்கிய ஆலோசனை படி, அமைக்கப்பட்டுள்ள பூத் கழக நிர்வாகிகள் செயல்பாடுகள், வாக்காளர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் , இளைஞர் இளம்பெண்கள் பாசறை,
விளையாட்டு வீரர்கள் அணி, மாணவரணி ஆகிய அமைப்புகளை மேலும் வலிமையாக்கும் பணி,  தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளின் செயல்பாடுகளை அனைத்து சமூக வலைதளங்களுக்கும் விரிவுபடுத்துதல்,   அரசின் சாதனைகளையும், விடியா திமுகவின் மக்கள் விரோத ஆட்சியை பற்றி விளக்கி தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவது,
வளர்ச்சி பணிகள், ஆகியவை குறித்த ஆலோசனைகளை  திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர்  ப.குமார்  கூறினார்.

இக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் S.M.பாலன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் C.சின்னசாமி, மருங்காபுரி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் R.சந்திரசேகர், தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் மண்டல தகவல் பிரிவு திருச்சி மண்டல இணைச் செயலாளர் AD.சதீஸ், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ரஞ்சித் குமார், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் பிரியா மற்றும் மாவட்ட கழக பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, ஒன்றிய கழக செயலாளர்கள் N.சேது, SS.இராவணன், கண்ணூத்து S.பொன்னுச்சாமி, N.அன்பரசன், SKD.கார்த்தி, M.அருணகிரி, நகர கழக செயலாளர்கள் பவுன் ராமமூர்த்தி, பொன்னி சேகர், பகுதி கழக செயலாளர்கள் பாலசுப்ரமணியன், பாஸ்கர் கோபால்ராஜ், தண்டபாணி, பேரூர் கழக செயலாளர்கள் ஜெயசீலன், ஜேக்கப் அருள்ராஜ், பிச்சை பிள்ளை, பொதுக்குழு உறுப்பினர்கள் SMKM.இஸ்மாயில், P.சாந்தி, I.விஜயா, சார்பு அணி செயலாளர்கள் அம்மா பேரவை S.ராஜமணிகண்டன், இளைஞர் அணி, VDM.அருண் நேரு, மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வமேரி ஜார்ஜ், மாணவர் அணி KPT.அழகர்சாமி, இலக்கிய அணி TM.முருகன், வர்த்தக அணி L.எத்திராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு T.காசிராமன் உள்ளிட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி கழக செயலாளர்கள், சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.