திருச்சி – தாம்பரம் சிறப்பு ரயில் நிரந்தர விரைவு ரயிலாக மாற்றம்: திருப்பதி -ராமேசுவரம் ரயில் வாரத்தில் 4 நாள்கள் அதிகரிபப் : திருச்சி எம்.பி. வரவேற்பு

0 163
Stalin trichy visit

திருச்சி,பிப்.21 திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக தலைமை நிலைய செயலாளருமான தெரிவித்திருப்பதாவது,

திருச்சி – தாம்பரம் இடையேயான சிறப்பு இரயில் நிரந்தர விரைவு இரயிலாக மாற்றப்பட்டு இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டதற்கும், திருப்பதி – இராமேஸ்வரம் விரைவு ரயில் சேவை வாரத்தில் நான்கு நாட்களாக அதிகரிக்கப்பட்டதற்கும் எனது மனமார்ந்த நன்றியையும், மகிழ்ச்சியான வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருச்சி – தாம்பரம் இடையேயான சிறப்பு இரயில் (06190/06191) இனி நிரந்தர விரைவு இரயிலாக (16808/16807) இயக்கப்படும் என்பதை ஏற்கனவே தெரிவித்திருந்தேன். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று (20.02.2026) தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ளது.

இந்த இரயிலை நிரந்தரமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை 10.12.2025 அன்று ஒன்றிய இரயில்வே அமைச்சரிடமும், 30.01.2026 அன்று தென்னக இரயில்வே பொதுமேலாளரிடமும் தொடர்ந்து முன்வைத்தேன். மேலும், சிறப்பு இரயிலாக இயங்கிய காலத்திலேயே திருவெறும்பூர் நிலையத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என்ற எனது தொடர்ச்சியான கோரிக்கையை ஏற்று அந்நிறுத்தம் ஏற்கனவே வழங்கப்பட்டது.

இந்த நிரந்தர விரைவு இரயில், வாரத்தில் ஐந்து நாட்கள் (செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளைத் தவிர) இயக்கப்படும். இந்த சேவை 01.03.2026 முதல் தொடங்கும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், திருச்சி வழியாக இயக்கப்படும் திருப்பதி – இராமேஸ்வரம் விரைவு ரயில் சேவை வாரத்தில் மூன்று நாட்களிலிருந்து நான்கு நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த இரு முக்கிய அறிவிப்புகளும் எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு மிகுந்த பயனளிக்கும். தொடர்ந்து நான் மேற்கொண்டு வரும் எனது முயற்சிகளின் விளைவாக ஏற்படும் ஒவ்வொரு முன்னேற்றத்திலும் மக்கள் பயனடைவதை எண்ணி நான் மகிழ்கிறேன்.

அதுபோல, இந்த சேவைகளை அமல்படுத்திய தென்னக இரயில்வே துறைக்கும், ஒன்றிய இரயில்வே  அமைச்சகத்துக்கும் , மதிப்பிற்குரிய இரயில்வே  அமைச்சர்  அஸ்வினி     வைஷ்ணவ் -க்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருச்சி தொகுதி மக்களின் இரயில் பயணத் தேவைகளை மேலும் மேம்படுத்த தொடர்ந்து பாடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.