திருச்சியில் கத்தியை காட்டி வழிப்பறி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது!

0 519
Stalin trichy visit

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் திருச்சி மாநகரில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க ரவுடிகள் மீது நடவடிக்கை எடுத்தும், குற்றங்கள் எதுவும் நடைபெறாத வண்ணம் ரோந்து செய்தும், தீவிர வாகன தணிக்கை செய்ய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்ஞர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்தநிலையில் பாலக்கரை பெல்ஸ் கிரவுண்ட் பிள்ளையார்கோவில் அருகே கடந்த மாதம் 21ம் தேதி பார்த்திபன் என்பவருடைய இருசக்கர வாகனத்தை நிறுத்தி தர்மா என்கிற தர்மராஜ், முருகானந்தம், சுனில் ஆகிய 3 பேரும் கத்தியை காண்பித்து அவரிடம் இருந்து 50 ஆயிரம் பணத்தை பறித்து சென்றுவிட்டதாக பாலக்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் தருமா (எ) தர்மராஜ் பல்வேறு காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இந்தநிலையில் தர்மா என்கிற தர்மராஜ் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உடையவர் என விசாரணையில் தெரிய வந்ததால் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் தர்மராஜ் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்‌. மேலும் மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.