நீதிமன்றத்தில் மோதலில் ஈடுபட்ட இருவர் கைது

0 141
Stalin trichy visit

திருச்சி அக்.29 திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 24)
திருச்சி உய்யக்கொண்டான் திருமலை பகுதியைச் சேர்ந்தவர் பிராங்கிலின் (வயது 25 ). இவர்கள் 2 பேர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளன. மேலும் இரண்டு பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.
பிராங்கிலின் மீது போலீஸ்காரரை மிரட்டியதாக கோட்டை போலீசில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நாகராஜ் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு ஒரு வழக்கறிஞரை பார்ப்பதற்காகவும், பிராங்கிலின் தனது நண்பர் ஒருவரை சந்திப்பதற்காகவும் இன்று காலைநீதிமன்றத்திற்கு வந்தனர்.
திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண். 6  நுழைவு வாயில் பகுதியில் வராண்டாவில் இரண்டு பேரும் வந்தபோது அவர்களுக்கிடையே திடீர் வாக்குவாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டது.
இதனைப் பார்த்த நீதிபதி சுப்பிரமணி இரண்டு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து போலீசார் இரண்டு பேரையும் பிடித்து ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற பணியாளர் புகாரின் அடிப்படையில் இரண்டு பேரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று கோர்ட் வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

Leave A Reply

Your email address will not be published.