மணப்பாறையில் கஞ்சா விற்ற இருவர் கைது
திருச்சி, மார்ச் 21 திருச்சி மாவட்டம், மணப்பாறை, பூங்கா சாலையில் உள்ள உழவர் சந்தை அருகில் இருவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக வந்த தகவலையடுத்து மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது போலீசாரைக்கண்ட இருவரும் அங்கிருந்து ஓட முற்பட்டனர். இருப்பினும் அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை செய்தபோது கஞ்சாவை விற்பனை செய்த வைத்திருந்ததும் அவர்கள் மோர்குளம் பகுதியைச் சேர்ந்த விஜய், தஞ்சை மாவட்டம், மணல்மேட்டைச் சேர்ந்த குமார் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.