டாஸ்மாக் பார் ஊழியரிடம் பணம் பறித்தவர் கைது
திருச்சி, மார்ச் 21 திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள டாஸ்மாக் பார் ஊழியரிடம் பணத்தை பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை முசிறி போலீஸார் கைது செய்தனர்.
முசிறி மேல வடுகப்பட்டி சேர்ந்த கோவிந்தன் மகன் தனபால் ( 46 ), இவர் முசிறியில் உள்ள 10 360 அரசு மதுபான கடையில் உள்ள பாரில் வேலை பார்த்து வருவதாகவும், நேற்று பாரினை சுத்தம் செய்து விட்டு வெளியே வந்தவரிடம் முசிறி செவந்தலிங்கபுரம் மேலத்தெரு சேர்ந்த ராஜரத்தினம் மகன் ஹரிதாஸ் (36), என்பவர் தகராறு செய்து கத்தியை காட்டி தனபால் வைத்திருந்த ரூ. 1200 பணத்தை பறித்துள்ளார். அப்போது தனபால் கூச்சலிட்டதில் பாரில் வேலை செய்யும் இருவர் ஹரிதாசை பிடித்து முசிறி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து தனபால் அளித்த புகாரின் பேரில் முசிறி காவல் ஆய்வாளர் செல்லத்துரை வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.