ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட இருவர் தூக்கிட்டு தற்கொலை

0 204
Stalin trichy visit

திருச்சி, ஏப். 29 திருச்சியில் ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

திருச்சி வயலூர் ரோடு கீதா நகர் வடக்கு விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 44) இவர் திருமணம் ஆகாதவர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வருகிறது. இந்நிலையில் சரிவர தொழில் நடைபெறாத காரணத்தால் மனம் உடைந்த பிரபு சம்பவத்தன்று வீட்டில் மின்விசிறியில் சேலையில் தூக்கு மாட்டை தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவரது தந்தை நடராஜன் உறையூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய பிரபு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோன்று திருச்சி உறையூர் பாளையம் பஜார் தொகுதியை சேர்ந்தவர் கோகுல் கிருஷ்ணன் (வயது 46) இவர் குடி போதைக்கு அடிமையானவர்.
சம்பவத்தன்று மனமடைந்த இவர் வீட்டின் மொட்டை மாடியில் தூக்கு மாட்டிதற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். இதனை பார்த்துஅதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த  கோகுலகிருஷ்ணன் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த 2 சம்பவம் குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.