பெண் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

0 352
Stalin trichy visit

திருச்சி, ஏப். 29 பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தொட்டியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி சின்னம்மாள் (வயது 66)இவர்கள் குடும்பத்துடன் திருவளர்சோலை அருகில் உள்ள செங்கல் சூளையில் கூலி வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 26ந்தேதி அன்று சின்னம்மாள்க்கு தீராத வயிற்று வலி காரணமாக வலி ஏற்பட்டது. இதனை தாங்கி கொள்ள முடியாத சின்னம்மாள் மனம் உடைந்து பூச்சிக்கொல்லி மருந்ததை சாப்பிட்டு மயக்கம் அடைந்து கிடந்தார். இதையடுத்து அவரை ஆபத்தான நிலையில் திருவரங்கரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னம்மாள் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.