பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இருவர் படுகாயம்

0 267
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 20: திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொனலையில் மோட்டார் பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பெண் உட்பட இருவர் படுகாயம். போலீசார் விசாரணை.

திருச்சி மாவட்டம் சமயபுரம் காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் 24 வயதான பரசுராமன் (24) . இவர் தனது மோட்டார் பைக்கில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அதேபோல் சமயபுரம் அருகே இனாம் சமயபுரத்தைச் சேர்ந்தவர்  பிரசாந்த்குமார் (25)  மற்றும் லால்குடி அருகே அன்பில் வடக்கு தெருவை சேர்ந்தவர்  நந்தினி(27). இவர்கள் இருவரும் மோட்டார் பைக்கில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எதிர் திசையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது கொணலைப் பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மோட்டார் பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் பரசுராமன் மற்றும் நந்தினி இருவரும் படுகாயமடைந்தனர். விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக இருங்களூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த விபத்து குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.