மூடப்படாமல் உள்ள ஆழ்துளை கிணறு: விபரீதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்கப்படுமா? –

0 422
Stalin trichy visit

திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு ஊராட்சியில் திறந்த நிலையில் ஆழ்குழாய் கிணறு?

ஆபத்து வருமுன் நடவடிக்கை எடுக்க பாஜக மண்டல் தலைவர் கோரிக்கை

திருவெறும்பூர்  அக் 14 திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு ஊராட்சி அண்ணா நகர் பகுதி அருகே உள்ள கிருஷ்ணா ஸ்டோரின் எதிரில் முன்பு சின்டெக்ஸ் டேங்க் உடன் ஆழ் குழாய் கிணறு  இருந்தது அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அதனைப் பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில் தற்போது அந்த சின்டெக்ஸ் டேங்க் அகற்றப்பட்டு விட்டது.அங்கிருந்த மின் மோட்டார் மற்றும் இதர பொருட்கள் எதுவும் இல்லை இதனை எடுத்துச் சென்றவர்கள் யார் என்று தெரியவில்லை தற்பொழுது அங்கு போடப்பட்டிருந்த ஆழ் குழாய் கிணறு மூடப்படாமல் திறந்த நிலையில் இருந்து வருகிறது அப்பகுதியில் சிறுவர்கள் குழந்தைகள் அதிகம் வசித்து வருகின்றனர்.திறந்த நிலையில் ஆழ்குழாய் கிணறு இருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறுவதற்கு முன்னதாக உடனடியாக அந்த ஆழ்குழாய் கிணறு மூடப்பட வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் விரும்புகின்றனர்.திருவெறும்பூர் தெற்கு மண்டல பாஜக தலைவர் குமரன் கூறுகையில் அரசு போர்க்கால அடிப்படையில் இதற்கு தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.