சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ. 6 கோடியில் அமைக்கப்படும் புராதன பூங்கா: ஆணையர் வைத்திநாதன் ஆய்வு
திருச்சி, ஜூன் 10. திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், பட்டர் வொர்த் சாலையில் ரூ. 6 கோடியில் அமைக்கப்படும் புராதன பூங்கா கட்டுமானப் பணிகளையும், மேலரண் சாலை பகுதிகளில் நடைபெறும் புதைவடிகால் திட்ட குழாய் புனரமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்த ஆணையர், பணிகளை விரைந்து முடிக்க தொடர்புடைய பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார்.