வாகன விபத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டி பலி-நல்லடக்கம் செய்த சமூக ஆர்வலர்…
திருச்சி கரூர் பிரதான சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க பெண் மூதாட்டி மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து நிலையில் இறந்துள்ளார்.
விபத்தில் பலியான மூதாட்டி உடலை யாரும் உரிமை கோரப்படாத நிலையில் திருச்சி ஜீயபுரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துராமகிருஷ்ணன் நல்லடக்கம் செய்வதற்காக திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துராமகிருஷ்ணன் முன்னிலையில் மூதாட்டிக்கு இறுதி சடங்கு செய்து யோகா ஆசிரியர் விஜயகுமார் நல்லடக்கம் செய்தார்.