ஒன்றிய அரசின் திட்டங்கள் செயல்படுத்துவது தொடர்பாக ஒன்றிய கல்வி இணை அமைச்சர் ஆய்வு

0 221
Stalin trichy visit

ஒன்றியஅரசின் திட்டங்கள் செயல்படுத்துவது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருடன் மத்திய கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் ஆய்வு

திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மத்திய கல்வி துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் நேற்று விமானம் மூலம் திருச்சி வந்தார். நேற்று காலை என்.ஐ.டியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தொடர்ந்து திருச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் மத்திய அரசின் திட்டங்கள், அவற்றை செயல்படுத்தியது, அதன் முன்னேற்றம் குறித்தான ஆய்வு கூட்டம் இணை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பிரதமரின் ஜந்தன் யோஜனா, உஜ்வாலா, போஷன் அபியான் உள்ளிட்ட ஒன்றிய அரசின் பல்வேறு திட்டங்கள் மாவட்டத்தில் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது, அந்த திட்டத்தில் எவ்வளவு பேர் பயன்பெற்றுள்ளார்கள் என்பது குறித்து கேட்டறிந்தார்.

Leave A Reply

Your email address will not be published.