வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடம் காணொளி காட்சி மூலம் திறப்பு

0 262
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 29  மணப்பாறை அருகே வையம்பட்டியில் 3.95 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம்  காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ. 3.95 கோடிமதிப்பீட்டில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து புதிய கட்டிடத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது ஆகியோர் குத்து விளக்கேற்றி அலுவலகத்தை பார்வையிட்டனர். மேலும் அலுவலக முகப்பில் கல்வெட்டை திறந்து வைத்து அலுவலக வளாகத்தில் ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ மரக்கன்றுகள் நட்டு வைத்து தண்ணீர் ஊற்றினர். விழாவில் வையம்பட்டி ஒன்றியக்குழு தலைவர் குணசீலன், துணைத்தலைவர் ஶ்ரீவித்யா ரமேஷ், திமுக ஒன்றிய செயலாளர்கள் சீரங்கன், ராஜேந்திரன், வையம்பட்டி ஊராட்சி தலைவர் சூர்யா சுப்பிரமணியன், குமாராவடி ஊராட்சி மன்ற தலைவர் M.கீதா மணி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.