மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் ந.செந்தில்
மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் இன்று தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் குறிஞ்சி நகரில் தண்ணீர் சரியாக வருகிறதா என்பதையும், ஜோதி புரத்தில் தண்ணீர் சரியாக வருகிறதா என்பதையும், காவேரி நகர் நாடார் சமுதாய மண்டபம் அருகில் மழையின் காரணமாக ஏற்பட்ட குண்டு குழியினையும், பர்மா காலனியில் தண்ணீர் சரியாக வருகிறதா என்பதையும், பர்மா காலனி பன்னீர் செல்வம் தெருவில் தண்ணீர் சரியாக வருகிறதா என்பதையும் , பர்மா காலனி காமராஜர் தெருவில் தண்ணீர் சரியாக வருகிறதா என்பதையும், குறிஞ்சி நகரில் சாக்கடையை முழுமையாக தூர்வாரி சுத்தம் செய்தல் பணியையும், பர்மா காலனி சிறுவர் பூங்கா எதிரில் நாற்பதாண்டு காலமாக ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த இடத்தினை மீட்டு சரி செய்ததையும், பர்மா காலனி சிறுவர் பூங்கா எதிரில் நாற்பதாண்டு காலமாக ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த இடத்தினை சுத்தமாக இடித்து தரமட்டமாக ஆக்கியதையும், பர்மா காலனி ரேஷன் கடை சுற்றியுள்ள இடங்களை சுத்தம் செய்தல் பணியையும், ஆயில் மில் மெயின் ரோட்டில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தல் பணியையும், பர்மா காலனி சிறுவர் பூங்காவில் சுற்றியுள்ள இடங்களை சுத்தம் செய்தல் பணியையும், அந்தோனியார் கோயில் முன்புறம் உள்ள குப்பைகளை அகற்றும் பணியையும், ஆயில் மில் மெயின் ரோட்டில் குப்பைகளை சுத்தம் செய்தல் பணியையும், காட்டூர் மெயின் ரோட்டில் மண்ணை சுத்தமாக அள்ளி குப்பைகளை அகற்றும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்த போது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
