சமுத்தி குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை: அரசு சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ்
திருச்சி, ஜூலை 25 திருவெறும்பூர் அருகே சமுத்தி குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வில்லை என்றால் அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை என்று அரசு சார்பில் நோட்டீஸ் ஒட்டி எச்சரிக்கை
திருச்சி திருவெறும்பூர் அருகே கிருஷ்ணசமுத்திரம் பகுதியில் 478 ஏக்கர் பரப்பளவில் சமுத்தி குளம் உள்ளது இதில் தனிநபர்கள் வீடுகள் கட்டி ஆக்கிரமித்து வருவதாகவும் மேலும் அங்கு பிளாட் போட்டு விற்பனை செய்வதாகவும் இது குறித்து திருவெறும்பூர் தாசில்தார் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியரிடமும் சமுத்தி குள பாசன விவசாயிகள் போராட்டம் நடத்தி மனு அளித்த நிலையில் இந்தக் குளம் நீர்வளத்துறைக்கு சொந்தமான குளம் என்றும் இதில் ஆக்கிரமிப்பு செய்தால் மூன்று மாத சிறை தண்டனையும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தண்டிக்கப்படுவார்கள் என்று ஆற்று பாதுகாப்பு பிரிவு உதவி பொறியாளர் ரஞ்சித்குமார் சார்பில் சம்பந்தபட்ட குளம், விஏஓ அலுவலகம், பஞ்சாயத்து அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நோட்டிஸ் ஒட்டப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியை சேர்ந்த பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைவதோடு விரைவில் அந்த குளத்தில் உள்ள முழு ஆக்கிரமிப்புகளையும் அகற்றி குளத்தை மீட்டு தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.