நீட் தேர்வு முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு: திருச்சியில் அமைச்சர் ரமேஷ் பேட்டி
திருச்சி, ஜூலை 25 நீட் தேர்வு முற்றிலுமாக அகற்ற வேண்டும் அதற்கு கல்வி மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. அதற்கான முயற்சிகளில் நாங்கள் ஈடுபடுவோம் – திருச்சியில் அமைச்சர் ரமேஷ் பேட்டி
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் தயாளுடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ரமேஷ்
சமயபுரம் கோவிலில் மணியமாக பணியாற்றவர் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததால் அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த விசாரணை நேர்மையாக நடைப்பெற வேண்டும் என்பதற்காக அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளோம். விசாரணைக்கு பின்பு குற்றம் நிரூபிக்கப்பட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்
திருச்சி அரசு மருத்துவமனையில் எலி நடமாட்டம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசு ப உட்கட்டமைப்பு பிரச்சனைகளை சரி செய்து உட்கட்டமைப்பை மேம்படுத்த உள்ளோம் . ஸ்ரீரங்கத்தில் புதிய அரசு மருத்துவமனை கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
பட்ஜெட்டில் திருச்சி மாவட்டத்திற்கு என்ன கொண்டு வர வேண்டும் என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்.
எதை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என தெரியாமல் பழனி நிலம் தொடர்பாக சிலர் அரசியல் செய்து வருகிறார்கள். அங்கே அப்படி ஒரு நிலம் இருப்பதே எனக்கு இந்த பிரச்சனை வந்த பின்பு தான் தெரியும். நான் கூறி தான் அந்த வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு முதல்வர் மாற்றினார். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். என்னுடைய உறவினர்களுக்கு இதில் தொடர்பு இருக்கிறது. எனக்கு தொடர்பு இருக்கிறது என அரசியல் செய்கிறார்கள் இதையெல்லாம் வைத்து அரசியல் செய்யாமல் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் மக்கள் உங்களை திரும்பி பார்ப்பார்கள்.
நீட் தேர்வு முற்றிலுமாக அகற்ற வேண்டும் அதற்கு கல்வி மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. அதற்கான முயற்சிகளில் நாங்கள் ஈடுபடுவோம்.
நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராடுவதை மதிக்கிறோம் அதே நேரத்தில் சிலர் இந்த போராட்டத்தில் புகுந்து முதலமைச்சருக்கு எதிராக தமிழக அரசுக்கு எதிராக போராட்டத்தை திருப்ப வேண்டும் என முயற்சித்தால் அதை அரசு எப்படி கையாளுமோ அப்படி கையாளும்.
சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக மசோதா நிறைவேற்றப்படுமா என்பது குறித்து முதல்வர் தெரிவிப்பார் என்றார்.