கழிவு நீக்கும் வாகன கூலி தொழிலாளி தவறி விழுந்து சாவு

0 239
Stalin trichy visit

மயிலாடுதுறையை சேர்ந்தவர் கனகராஜ்(வயது 45). இவர் திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள தனியார் கழிவு நீக்கும் வாகனத்தில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் வாகனத்தில் ஏறி கழிவு நீக்கும் பைப்புகளை சுற்றிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் வாகனத்தில் இருந்து எதிர்பாராத விதமாக திடீரென்று நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக துறையூரில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி கனகராஜ் இறந்தார். இதுபற்றி அரவிந்த் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.