எம்.களத்தூர் ஏரியில் நீர் கசிவு – மணல் முட்டை அடுக்கி தடுத்து நடவடிக்கை

0 371
Stalin trichy visit

தொட்டியம் அருகே ஏரியின் நீர் கசிவு மணல் முட்டை அடுக்கி தடுத்து நடவடிக்கை.

தொட்டியம் அருகே உள்ள எம்.களத்தூர் ஏரியில் தற்போது மழை நீர் வரத்து அதிகமாக உள்ளதால் ஏரியின் ஒரு புறத்தில் நீர் கசிவு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும் முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி ந.தியாகராஜன் மற்றும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நித்தியானந்தம் ஆகியோர் போர்க்கால அடிப்படையில் உடனடி ஆய்வு மேற்கொண்டு பணியாளர்கள் மூலம் ஏரியின் நீர் கசிவை உடனடியாக சீரமைத்தனர். உடனடி நடவடிக்கையால் எம்.களத்தூர் ஏரியிலிருந்து அதிகமான நீர்க்கசிவு உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.