மழை நீர் செல்ல பல ஆண்டுகளாக தூர் வாரப்படாத வாய்க்கால் சீரமைப்பு

0 263
Stalin trichy visit

காட்டுப்புத்தூரில் மழை நீர் செல்ல பல ஆண்டுகளாக தூர் வாரப்படாத வாய்க்கால் சீரமைப்பு – பொதுமக்கள் வரவேற்பு.

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி வார்டு பகுதியில் மேற்கு தவிட்டுப்பாளையம் காலனி குடியிருப்பு பகுதியில் பெத்தான் குட்டை பகுதியில் இருந்து உபரி நீர் செல்லும் வடிகால் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் தூர்ந்து தண்ணீர் செல்வதற்கு ஏற்புடையதாக இல்லாத நிலையில் இருந்தது. இதனால் மழைக்காலங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரினால் பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் ஆலோசனையின் பேரில் பொத்தான் பாறை குட்டை மழை நீரினால் நிரம்பி வழியும் காலத்தில் காலணி குடியிருப்பு வாய்க்காலில் தண்ணீர் தேங்காத வகையில் பொத்தான் பாறை குட்டை முதல் காட்டுப்புத்தூர் வரை வடிகால் வாய்க்கால் பொக்லைன் இந்திரம் மூலம் பேரூராட்சி செயல் அலுவலர் சாகுல்அமீது மேற்பரவையில் தூர்வாரப்பட்டது. தற்போது பெய்துள்ள மழை காரணமாக வரும் உபரி நீர் தேங்காமல் அடுத்த பகுதிக்கு வெளியேறி செல்கிறது. இதனால் காலனி பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர். அப்போது பேரூராட்சி தலைவர் சங்கீதா சுரேஷ், துணைத் தலைவர் சுதா செல்வராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பேரூராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.