உய்யக்கொண்டான் வாயக்காலில் கழிவுநீர் நேரிடையாக கலப்பதை தடுக்க தண்ணீர் அமைப்பு கோரிக்கை

0 279
Stalin trichy visit

உய்யக் கொண்டானில் கழிவு நீர் நேரிடையாக கலப்பது தடுக்க வேண்டும் தண்ணீர் அமைப்பு கோரிக்கை

திருச்சி உய்யக்கொண் டான் வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டா லும், கழிவு நீர் கலப்பது தொடர்கிறது.

பெரும்பாலான இடங்களில் கழிவு நீர் கலப்பதால் உய்யக்கொண்டான் வாய்க்கால் நீரின் தன்மை முற்றிலுமாக மாறிகழிவு நீர் வாய்க்காலாகவே மாறிப் போனது. மாநகரப் பகுதியில் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வீடுகள், மருத்து வமனைகள், உணவகங்கள் ஆகியவற்றி லிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் நேரடியாக இந்த வாய்க்காலில் திறந்து விடப்படுவதால் வாய்க்கால் முற்றிலு மாக மாசுபட்டுள்ளது.

கழிவு நீர் அதிகளவில் சென்று குழுமாயி அம்மன் கோயில் அருகேயுள்ள தொட்டிப்பாலம் வழியாக குடமுருட் டியிலும் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உய்யக்கொண்டான் தண்ணீர் பொதுமக்கள் பயன்படுத்த முடியவில்லை , அடுத்துடன் தண்ணீர் மாசு அடைவதுடன், கொசு உற்பத்தி மையமாகவும் மாறியி ருக்கிறது.

தற்போது நீர் வரத்துக் காலம் என்பதால் பல இடங்களில் கழிவு நீர் கலந்து வருகிறது. நீரோட்டம் இல்லாத நிலையில் கழிவு நீரின் புகலிடமாக உய்யக் கொண்டான் வாய்க்கால் மாறிவிடும்.

உய்யக்கொண்டான் பாதுகாப்புக் குழு:

உய்யக்கொண்டான் வாய்க்காலைச் சீரமைக்க, குறிப்பாக அதில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்கும் வகையில் கடந்த 2014 ஆவது ஆண்டில், உய்யக் கொண்டான்பாதுகாப்புக்குழுஅமைக் கப்பட்டது. இதற்கு மாவட்டஆட்சியர் தலைவராகவும், மாநகர ஆணையர், மற்றும் நீராதாரத் துறை ஆற்றுப்பாதுகாப்புக் கோட்டப் பொறியாளர்கள் மாந கராட்சியினர், மருத்துவமனை குடியிருப்போர் நலச் சங்கத்தினர், தன்னார்வ அமைப்பினர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் இருந்தனர். குழு தொடங்கிய வேகத்தில் கரையில் கான்கிரீட் சுவர் கள் அமைப்பது உள்பட சில பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் அடுத்தடுத்து வந்த ஆட்சியர்கள் இக்குழுவை கண்டுகொள்ளவில்லை.

உய்யக்கொண்டான் பாதுகாப்புக்குழுவில் தண்ணீர் அமைப்பு,
உய்யகொண்டான் வாய்க்காலை
மீட்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்புக் குழுவில் அங்கம் வைத்திருந்தது.

பின்னர் வந்த மாவட்ட ஆட்சியர்கள் பல ஆண்டுகளாக அக்குழு செயல் படவில்லை. வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதாலும், கோடைகாலங்களில் கழிவுநீர் தேங்கி நிற்பதாலும் வாய்க் கால் துர்நாற்றம் வீசுவதோடு தண்ணீர் மாசு அடைவதுடன் , கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது. இதனால் மக்களுக்கு பல்வேறு தொற்று
நிலத்தடி நீரும் நச்சுத்தன்மையடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே மீண்டும் உய்யக்கொண்டான் பாதுகாப்புக்குழுவை கூட்ட வேண்டும் என வும்

மேலும் உய்யகொண்டான் வாய்க்காலில் ஒட்டிய உள்ள வீடுகளில் இருந்து குழாய்கள் மூலம் நேரடியாகவும் , மற்றும் கழிவுநீர் திறந்து விடுவதைத் தடுக்க  மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தண்ணீர் அமைப்பு, மற்றும் மக்கள் சக்தி இயக்க சார்பில் தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி. நீலமேகம் ,  கேட்டு  கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.