ரங்கராஜன் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க உள்ளோம் – கோவில் இணை ஆணையர்!

0 545
Stalin trichy visit

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு நேற்று புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் ஜாகீர் உசேன் வந்திருந்தபோது அவரை கோவிலுக்குள் செல்லவிடாமல் ரங்கராஜன் தடுத்துள்ளார்.

இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என ரங்கராஜன் தடுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ஜாகிர் உசேனின் நண்பர் சமூகவலைதளங்களில் இதுகுறித்து பதிவிட்டிருந்தார் – குறிப்பாக ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் பலமுறை ஜாகிர் உசேன் சென்று பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி இருப்பதாகவும் தற்போது திடீரென அவரை உள்ளே அனுமதிக்காமல் தடுப்பது எப்படி ஏற்பது என்று கேள்வி எழுப்பி இருந்தார்?

இதுகுறித்து ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் தரப்பில் கேட்டபோது : கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தெரிவித்தது :

 

கோவில் நிர்வாகம் யாரையும் கோவிலுக்குள் செல்ல முடியாது என்று மறுக்கவில்லை – வெளிநாடுகளிலிருந்து பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் தொடர்ந்து ஸ்ரீரங்கம் ஆலயத்திற்கு வந்து செல்கிறார்கள், சுற்றுலா பயணிகளுக்கு என்று சில நிபந்தனைகளுடன் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

 

ஆனால் ரங்கராஜன் இதுபோன்று பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் தடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது எனவே அவர் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க உள்ளோம்.

Leave A Reply

Your email address will not be published.