முனைவர் பட்டம் பெற்ற அமைச்சர் அன்பில் மகேஸ்
திருச்சி, நவ.18 தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் திருச்சி தேசிய கல்லூரியில் உடற்கல்வியியல் துறையில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் உடற்கல்வி இயந்திர கற்றல் வழியாக பள்ளி மாணவர்களுக்கு திறன்மிகு கற்றல் என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வந்தார். இதன் ஒரு பகுதியாக நேற்று (நவ.17) அக்கல்லூரியில் முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வு நடந்தது. இதில் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக ஆய்வாளர் திருமலைகுமார் கலந்துகொண்டு அமைச்சர் மகேஸை முனைவர் என அறிவித்தார். தேசியக் கல்லூரி துணை முதல்வர் மற்றும் உடற்கல்வித்துறை இயக்குநர் முனைவர் பிரசன்ன பாலாஜி வழிகாட்டுதலின் கீழ் இந்த ஆய்வு. மேற்கொள்ளப்பட்டது.
உடற்கல்வி செயல்பாடுகள் பள்ளி குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கு எவ்வாறு உதவுகின்றன, கணினி சார்ந்த முன் அறி விப்பு தொழில்நுட்பம் கற்றலுக்கு எவ்வாறு உதவுகி றது என்பதை இந்த ஆய்வுபகுப்பாய்வு செய்திருந்தது. உடற்கல்வி செயல்பாடுகள் குழந்தைகளின் முழு மையான வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் இயந்திரக் கற்றல் தொழில் நுட்பத்தின் மூலம் ஆராயும் வகையில் அமைந்தது.