மேகதாது அணைக்கட்ட விடமாட்டோம் : அமைச்சர் கே என் நேரு பேட்டி
தஞ்சாவூர், ஜூலை 31 கர்நாடக முதல்வர் சித்தராமையா சொல்வது போன்று எதுவும் நடக்காது, மேகதாது குறுக்கே அணைக்கட்ட விடமாட்டோம். இவ்விஷயத்தில் தமிழக முதல்வர் உறுதியாக இருக்கிறார். அதேபோல, மத்திய அரசும் அதை அனுமதிக்க முடியாது என்று கூறியிருக்கிறது. கர்நாடகாவில் ஏதோ அரசியல் செய்வதற்காக தொடர்ச்சியாக இதை பேசிக் கொண்டிருக்கிறார்கள – கல்லணையில் அமைச்சர் கே என் நேரு பேட்டி
டெல்டா பகுதிக்கு பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.. இதனை அமைச்சர்கள் கே என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்ய நாதன், டிஆர்பி ராஜா மற்றும் திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, மாவட்ட ஆட்சியர்கள், விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு விதை நெல் மற்றும் பூக்களை தூவி தண்ணீரை திறந்து வைத்தனர்..
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் கே என் நேரு பேசுகையில்..
காவிரி வெண்ணாறு. கல்லணை கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கு டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தற்போது வழங்கப்படும் தண்ணீர் நடப்பில் உள்ள குறுவை சாகுபடிக்கும். நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும், ஏரி, குளங்களில் நிரப்புவதற்கும் மற்றும் ஆடிப்பெருக்கை கொண்டாடுவதற்கும், மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது கல்லணையில் இருந்து காவிரி 1500 கனஅடி, வெண்ணாறு 1000 கன அடி, கல்லணைக் கால்வாய் 500 கனஅடி கொள்ளிடம் 400 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
மேலும் கூடுதலாக கிடைக்க உள்ள தண்ணீரை தேவைக்கேற்ப அனைத்து ஆறுகளிலும் வழங்கப்படும். தற்பொழுது திறந்துவிடப்பட்ட தண்ணீர் காவிரி, வெண்ணாறு மற்றும் கல்லணைக் கால்வாய்களின் கடைமடைப் பகுதிகளுக்கு விரைந்து செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பருவமழைக்கு ஏற்ப நீர்ப்பங்கீடு மாற்றி அமைக்கப்படும் மக்களுக்கு விவசாயப்பெருங்குடி தெரிவிப்பதுடன். நீரினை அன்புடன் சிக்கனமாக பயன்படுத்தி நீர்வளத்துறை அலுவலர்களுடன் நீர்பங்கீட்டிற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டார்..
கர்நாடக முதல்வர் சித்துராமையா சொல்வது போன்று எதுவும் நடக்காது, மேகதாது குறுக்கே அணைக்கட்ட விடமாட்டோம். இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் உறுதியாக இருக்கிறார். அதேபோல, மத்திய அரசும் அதை அனுமதிக்க முடியாது என்று கூறியிருக்கிறது. கர்நாடகாவில் ஏதோ அரசியல் செய்வதற்காக தொடர்ச்சியாக இதை பேசிக் கொண்டிருக்கிறார்கள் கடைமடைக்கு ஐந்து நாட்களில் தண்ணீர் சென்றடையும். ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் செல்லும்வரை வண்டல் மண் எடுக்கலாம். அதற்கு எவ்வித தடையும் கிடையாது என தெரிவித்தார்