கல்லணையில் இருந்து 35,000 கன அடி வீதம் நீர் திறப்பு
தஞ்சை, ஜூலை 31 மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று கல்லணையை வந்தடைந்தது. இதையடுத்து காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் மற்றும் 5 மாவட்டங்களின் ஆட்சியர்கள் பங்கேற்றனர். நீர் திறந்தவுடன் தண்ணீரில் நெல் மணிகள் மற்றும் மலர் தூவி விவசாயிகளுடன் வரவேற்றனர். கல்லணையிலிருந்து வினாடிக்கு 35,000 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகள், பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.