அர்ச்சகர்கள், கோவில் பூசாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்

0 430
Stalin trichy visit

திருச்சி தெற்கு மாவட்ட திமுகவின் சார்பில் சார்பாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருக்கோயிலின் அர்ச்சர்கள் மற்றும் கோவில் பூசாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி மாவட்டம். மணப்பாறையில் உள்ள தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது. தெற்கு மாவட்ட அவைத்தலைவர் பன்னப்பட்டி கோவிந்தராஜன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் குணசேகரன் வரவேற்றார்.

இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட கோவில் அர்ச்சகர்கள், மற்றும் பூசாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில்,
1970 க்கு முன்பு வரை அறநிலைத்துறைக்கு ஒரு தனித்துறையே இல்லை. ஏதோ ஒரு துறையுடன் சேர்த்துதான் இருக்கும். இதன் பிறகுதான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அறநிலையத்துறை என்று தனியாக இருக்கவேண்டும். சட்டமன்றத்தில் அதற்காக தனி நிர்வாகம் நடைபெறவேண்டும். தனி வரவு செலவு திட்டம் இருக்க வேண்டும் என்று அறநிலையத்துறை தனித்துறையாக அமைத்து அதற்கு தனியாக ஒரு அமைச்சர் இருக்கிறார் என்று சொல்லும் அளவிற்கு கலைஞர் செய்துள்ளார். தமிழகத்தில் கோவில்களுக்கு பல்வேறு திட்டங்களை, நலப்பணிகளை செய்யக்கூடிய அரசாக தமிழக அரசு உள்ளது. நலத்திட்டங்களை உங்களுக்கு வழங்குவதன் மூலமாக எங்களுக்கான பெருமையை தேடிக்கொள்கிறோம். கலைஞர் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு இனத்திற்கும் என்னென்ன செய்தார் என்பதை நினைவில் கொள்ளும் நாளாக எண்ணிப்பார்;க்கவேண்டும். கலைஞரின் புகழ் தமிழகம் மட்டுமல்ல உலகெல்லாம் வாழும் தமிழ் மக்கள் சொந்தம் கொண்டாடும் தலைவராக அவர் புகழ்பெற்று இருக்கின்றார். என அமைச்சர் பேசினார்.


இதனைத் தொடர்ந்து கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இதில் திமுக கவிஞர் சல்மா, பி.எம்.சபியுல்லா, மணப்பாறை நகர செயலாளர் மு.ம.செல்வம், ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, சீரங்கன், ராஜேந்திரன், செல்வராஜ், பழனியாண்டி, சின்னடைக்கன், பொன்னம்பட்டி  பேரூர் செயலாளர் மும்பை நாகராஜன், ஒன்றிய பெருந்தலைவர்கள் அமிர்தவள்ளி, குணசீலன், பேரூராட்சி தலைவர் சரண்யா, நகர் நிர்வாகிகள் ஜான்பிரிட்டோ, பால்பாண்டி, கோபி, பால்ராஜ், கார்த்திகேயன், கண்ணன், முறுக்கு மனோகர்,  மற்றும் திருக்கோவில் பணியாளர்கள், திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.