திருச்சி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் சம்பவ இடத்திலேயே பலி!
திருச்சி மாவட்டம் கோப்பு கீழத் தெருவை சேர்ந்தவர் வசந்தா (70). இவருக்கு நான்கு மகள்கள் மூன்று மகன்கள் உள்ளனர் கணவன் இறந்த நிலையில் வாழைப்பழ வியாபாரம் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை வீட்டில் இருந்து எழுந்த அவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக நடந்து சென்றுள்ளார் அப்போது அறுந்து கிடந்த மின்சார கம்பி கவனிக்காமல் மின்சார கம்பியை மிதித்த உள்ளார்.

இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த சோமரசம்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுமதி மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.