ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் மகளிர் தின விழா

0 263
Stalin trichy visit

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நமது ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக மற்றும் செயல் இயக்குனர் அவர்கள் திருமதி மருத்துவர் சசி பிரியா கோவிந்தராஜ் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை நிபுணர் அவர்களுக்கு திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியினால் இந்த உலக மகளிர் தின நன்னாளில் பெண்களை மருத்துவ கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் புற்றுநோய் பற்றிய மருத்துவம் மட்டும் கூறாமல் மனித சமுதாயத்தில் இடம் பெற்றுள்ள பெண்கள் எவ்வாறு தங்கள் வாழ்க்கையில் தனக்கென தனி இடம் வகுத்துக் கொள்வது பிறரிடம் இருந்து வாழ்த்துக்களையும் பரிசுகளையும் நோக்கி எதிர்பார்ப்பதை விட தாங்களே எவ்வாறு தங்களுக்கென தனி இடம் வகுத்துக் கொள்வது பிறரால் போற்றப்படுவது தனக்கென ஒரு தனி சமுதாயத்தை வகுத்துக் கொண்டு இந்த சமுதாயத்தில் எவ்வாறு முதலிடம் பிடிப்பது போன்ற கருத்துக்களை அடங்கிய சொற்பொழிவுகளை ஆற்றியமைக்காகவும் பெண்களுக்கு சுயமாக சிந்திக்கும் உத்வேக ஆற்றியமைக்காக இந்த பெண்கள் உத்வேக சிறப்பு விருதை வழங்கி கௌரவித்தார்கள் இந்த நிகழ்வில் மருத்துவம் அல்லாத பிற துறையை சார்ந்த டாக்டர் லட்சுமி பிரபா பாட்டனி துறையை சார்ந்தவர் மற்றும் டி ஜெயந்தி ராணி வழக்கறிஞர் திருமதி கே அகிலா வருவாய் துறை சேர்ந்தவர் மற்றும் ஆசை புட் நிறுவனத்தின் திருமதி எஸ் யோக சித்ரா இவர்களுக்கும் அவரவர்கள் துறையில் சிறந்து விளங்கியமைக்காக விருதுகள் வழங்கப்பட்டது விருதினை பெற்று நமது நிர்வாக இயக்குனர் தமது விருது ஏற்பு உரையில் பெண்கள் இந்த சமுதாயத்தில் தனக்கென எவ்வாறு சுயமரியாதையை பெற்றுக் கொள்வது தாங்களே எவ்வாறு முன்னேற வேண்டும் என்ற கருத்து நோக்கில் சிறப்புரையாற்றி அமைந்தார்கள் இந்த நிகழ்வில் ஸ்ரீமத் ஆண்டவன் அறிவியல் மற்றும் கலை கல்லூரியின் சார்பாக 2000 மாணவிகள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் கல்லூரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.