நெல்லில் விதை நேர்த்தி குறித்து வேளாண் மாணவர் செயல் விளக்கம்

0 243
Stalin trichy visit

கிரமத்தில் தங்கிப் பயிற்சிபெறும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் நாளந்தா வேளாண் கல்லூரி மாணவர்கள், வேளாண் தொழில்நுட்பம் குறித்துச் செயல் விளக்கம் அளித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக வே. மோகன் ராஜ் (இறுதியாண்டு மாணவன்), நெல்லில் விதை நேர்த்தி குறித்து விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது,

‘‌‍‍விதை நேர்த்தி என்பது பூஞ்சாணக் கொல்லி, பூச்சிக்கொல்லி, நுண்ணுயிர், இயற்கை பொருட்கள் போன்றவற்றைத் தனித்தோ (அ) ஒருங்கிணைத்து விதைகளின் மேல் இடுதல் மூலம், அவற்றை மண் மூலம் பரவும் நோய்கள் மற்றும் சேமிப்பில் விதைகளைத் தாக்கும் பூச்சிகள் போன்றவற்றில் இருந்து காத்து தொற்று நீக்குதல் மற்றும் சிறந்த முளைப்புத் திறமை, அதிக மகசூல் பெறுதலே ஆகும்.

‍‍நுண்ணுயிர் விதை நேர்த்தி என்பது உயிரியல் விதை நேர்த்தி முறைகளில் ஒன்றாகும். இதில் நுண்ணுயிர் கொண்டு விதை நேர்த்தி செய்யப்படும்.
எ.கா. ரைசோபியம், அசோஸ்பைரில்லம், ட்ரைக்கோடெர்மா, மெடாரைசியம் மற்றும் பல.
தேவையான பொருட்கள்‌ : அசோஸ்பைரில்லம் திரவ உரம், வெல்லம் அல்லது சர்க்கரை, தண்ணீர்

பயன்கள்: சிறந்த முளைப்புத் தன்மை, அதிக வேர் ஊடுறுவல், குறைந்த செயற்கை உரத் தேவை, குறைந்த மண் வளம் பாதிப்பு, சுற்றுப்புறச் சூழல் மாசு கட்டுப்பாடு, குறைந்த வேளாண்மை செலவு.’

Leave A Reply

Your email address will not be published.