குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான பயிலரங்கம்!

0 232
Stalin trichy visit

14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எவ்விதமான தொழில்களிலும் ஈடுபடுத்தக் கூடாது. மேலும், 15 முதல் 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதும் சட்டப்படி குற்றமாகும். குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம், 1986-ஐ சீரிய முறையில் அமலாக்கம் செய்திடும் வகையில் தமிழ்நாடு அரசால் மாநில செயல்திட்டம் (State Action Plan) உருவாக்கப்பட்டுள்ளது. அதனை செயல்படுத்தும் வகையில் சென்னை,

முதன்மை செயலாளர் / தொழிலாளர் ஆணையர் உத்திரவின்படி திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெயபாலன் மற்றும் திருச்சி தொழிலாளர் இணை ஆணையர் கோவிந்தன் ஆகியோர் தலைமையில் திருச்சி பெருமண்டலத்தில், குழந்தை தொழிலாளர் அகற்றுவதற்கான செயல்திட்டம் தொடர்பான பயிற்சி மற்றும் பயிலரங்கம் திருச்சி பெமினா ஹோட்டலில் 2 நாட்கள் நடைபெற்றது. மேலும் இன்றும் தொடர்ந்து நடைபெற்றது.

மேற்கண்ட பயிலரங்கத்தில், தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர்கள் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு உரிய வழிகளை மேற்கொள்வது குறித்து வருவாய்த் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் (DISH), வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்ககம், ஊரக வளர்ச்சி துறை, சமூக நலத் துறை, பள்ளி கல்வித் துறை,

சமூக பாதுகாப்பு துறை ஆகிய துறைகள் சார்ந்த அலுவலர்களுடன், அரசு சார்ந்த/ சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் திருச்சி பெருமண்டலத்திற்குட்பட்ட தொழிலாளர் உதவி ஆணையர்கள், தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், முத்திரை ஆய்வாளர்கள் ஆகியோர் இத்திட்டம் செயல்படுத்துதல் குறித்த பயிலரங்கத்தில் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.