யாசகம் பெற்று முதலமைச்சரின் தனி நிவாரண நிதிக்கு அளித்து வரும் முதியவர்

0 250
Stalin trichy visit

யாசகம் பெற்ற பணத்தை தொடர்ந்து முதலமைச்சரின் தனி நிவாரண நிதிக்கு அளித்து வரும் முதியவர் – மக்களிடமிருந்து பெரும் யாசகத்தை மக்களுக்கே கொடுப்பதாகவும் இதில் தனக்கு ஆத்மார்த்தமான திருப்தி கிடைப்பதாக பேட்டி …

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் தூத்துக்குடி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட கூல் பாண்டியன் என்கிற முதியவர் வழக்கம் போல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.

பொதுவாகவே பொதுமக்களிடம் இருந்து யாசகம் பெற்று அதனை அரசு பள்ளிகளுக்கு கொடுத்து உதவும் பூல் பாண்டி, முதலமைச்சரின் தனி நிவாரண நிதிக்கும் தொடர்ந்து நிதி வழங்கி வருகிறார்.

அந்த வகையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரை சந்தித்த பூல் பாண்டியன் தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக பத்தாயிரம் ரூபாயை வழங்கினார்.

இதுவரை தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 56 லட்சம் ரூபாய் வழங்கியுள்ள புல்பாண்டியன் பொது மக்களிடமிருந்து பெரும் யாசகத்தை பொதுமக்களின் நலனுக்காக அளிப்பதில் தான் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பூல் பாண்டியன் :

சிறு வயது முதற்கொண்டு பொதுத் தொண்டு செய்து அதனால் கிடைக்கும் மகிழ்ச்சியை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே எனது ஆசை.

சின்ன சின்ன துண்டுகளை செய்து வந்த நான் எனது குருநாதர் உடைய அறிவுறுத்தலின் பேரில் பொதுமக்களிடம் யாசகம் பெற்று பொதுமக்களின் நலனுக்காகவே அதனை கொடுத்து வந்தேன் – பல மாவட்டங்களுக்கு செல்லும்போது மக்கள் எனக்கு நல்ல வரவேற்பை தருகின்றனர் – குறிப்பாக மதுரை மாநகர மக்களுக்கு நான் செல்ல பிள்ளை.

எங்கு சென்றாலும் நீங்கள் பலருக்கு உதவி செய்வீர்கள் என்று நம்பிக்கையுடன் என்னிடம் யாசகம் கொடுக்கிறார்கள் அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் ஆயிரக்கணக்கில் எனக்கு பணம் கொடுத்து உதவுகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.