திருச்சி சிறுமி சுகித்தாவிற்கு இளம் சமூக சேவகர் விருது – 23

0 573
Stalin trichy visit

கொரிய தமிழ்ச் சங்கம் சார்பில் திருச்சி சிறுமி சுகித்தாவிற்கு இளம் சமூக சேவகர் விருது – 23 அளித்தது

திருச்சி, டிச. 12 தமிழர்கள் கடல் கடந்து அனைத்து நாடுகளிலும் தமிழையும் தமிழர்தம் பண்பாட்டையும் வளர்கும் விதமாக செயல்பட்டு வருகின்றனர்.

திருச்சியில் சிலம்ப சாதனை மாணவி கலை இளமணி விருது பெற்ற மோ.பி.சுகித்தா பல்வேறு விதங்களில் கடந்த நான்கு வருடங்களாக தன்னால் இயன்ற வரை பல்வேறு விதமான உதவிகளை வீடின்றி சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்கள் என அனைவருக்கும் உதவி வருகின்றார் மேலும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி நூலகங்களுக்கு புத்தகங்கள் பரிசளிப்பது, தான் பயின்ற சிலம்பத்தை மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது மற்றும் தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற நாட்களில் புத்தாடை கொடுத்து உதவுவது என பலவகையான உதவிகளை செய்வதை அறிந்து

கொரியாவில் செயல்பட்டு வரும் கொரிய தமிழ்ச் சங்கத்தின் பேராசிரியரும் மூத்த அறிவியலாளருமான முனைவர் இரா.அச்சுதன் தலைமையிலான தேர்வு குழுவினர் திருச்சி சுகித்தாவின் செயல்களை பாராட்டி சமூக சேவகர் விருதினை நேற்று திருச்சியில் வழங்கினார்கள்.

விருதினை கொரிய தமிழ்ச் சங்க தலைவர் முனைவர் செ.அரவிந்த ராஜா அவர்கள் சுகித்தாவுக்கு அளித்து கூறுகையில்

கொரியாவில் 1987 ம் ஆண்டு தமிழ்ச் சங்கத்திற்கான முன்னெடுப்புகளை எடுத்து தமிழ் ஆய்வாளர்களை கொரியாவிற்கு அழைத்து தமிழ்-கொரிய மொழி, வாழ்வியல் மற்றும் பண்பாட்டு ஒற்றுமைகள் குறித்தும், தமிழ் பொறியாளர்கள் ஆராய்ச்சியாளர்கள், தொழில் புரிவோர், ஆராய்ச்சி மாணவர்கள் வருகை மற்றும் வாழ்வியல் செயல்பாடுகள் மற்றும் உதவிகள் என செயல்பட்டு வருகின்றோம்

மேலும் கடந்த 2016 ம் வருடம் முதல் தமிழர் திருநாள் கூடுதல்கள், தமிழர் கலை இலக்கிய சந்திப்புகள், தமிழர்களுக்கு விருதுகள் பதிவிற்கான செயல் திட்டத்தை உருவாக்கி அதன் படி கடந்த 2020 ம் ஆண்டு முறைப்படி ஆவணங்களை சமர்ப்பித்து சட்டபடி கொரிய அரசின் பதிவுசான்றிதழ் கிடைக்கப்பெற்று செயல்பட்டு வருகின்றோம்

அந்த வகையில் இந்த வருடம் 2023 ம் ஆண்டு கலை இலக்கிய சந்திப்பு மற்றும் கொரிய தமிழ்ச் சங்க விருதுகள் 29.10.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று கொரியாவில் பாலசந்திரன், (இந்திய ஆட்சிப் பணி ஓய்வு) அவர்களை சிறப்பு அழைப்பாளராக அழைத்து சியோல், சொங்னம், கச்சான் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது

அந்த நிகழ்வில் நேரடியாக கலந்து கொள்ள இயலாத தமிழக விருதாளர்களுக்கு நேரடியாக தமிழகத்தில் அளித்து வருகின்றோம்

இன்று திருச்சியில் பல்வேறு சாதனைகள் மற்றும் சமூக சேவைகளை இந்த இளம் வயதில் செய்து வரும் செல்வி.சுகித்தாவுக்கு இளம் சமூக சேவகர் விருது – 23 அளிப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது என அரவிந்த ராஜா  கூறினார்கள்

உடன் கலைக்காவேரி நுண்கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர் கி.சதீஸ்குமார், தமிழ்நாடு சிலம்ப சம்மேளன தலைவர் வரகனேரி என்.கே.ரவிச்சந்திரன், டாக்டர் ஆ.செல்வராஜ், பெ.மேகலா, இரா.அபர்ணா மற்றும் சுகித்தாவின் தந்தை இரா.மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.