சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு உறுதி மொழி ஏற்பு
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் மனித உரிமைகள் தின உறுதி மொழியினை அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.