குடும்பப் பிரச்சனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை..

0 290
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் ஆரோக்கியபுரத்தில் உள்ள தனியார் கம்பெனி பின்புறம் நாவல் மரத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புள்ளம்பாடி அருகே மேலரசூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் 36 வயதான ஆரோக்கியராஜ். இவர் ஆரோக்கியபுரத்தில் உள்ள தனியார் சிமெண்ட் நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவி கணவரைப் பிரிந்து தன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இதனால் கடந்த சில மாதங்களாக ஆரோக்கியராஜ் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் வேலை செய்யும் தனியார் நிறுவனத்திற்கு பின்புறம் உள்ள நாவல் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த கல்லக்குடி போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.