மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

0 387
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள பெருவளப்பூரில் மின்மோட்டார் அறையில் படுத்து இருந்த இளைஞர் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தாலுக்கா தத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இன்பம். இவருடைய மகன்   சரத்குமார்(24) .இவர் பெருவளப்பூரில் உள்ள சீனிவாசன் மகன் மதிவாணன் (38) என்பவரிடம் கடந்த ஒன்றரை வருடமாக செம்மறி ஆடு மேய்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று பெருவளப்பூரில் உள்ள வயல் காட்டில் ஆடுகளை மேய்க்க சென்றவர் அங்குள்ள மின்மோட்டார் பாக்ஸில் கட்டுக் கம்பியை வைத்து அதில் படுத்து இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.