மது போதையில் குளத்தில் தவறி விழுந்த இருவர் பலி

0 481
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வாளாடி ஊராட்சியில் உள்ள சிவன் கோயில் அருகில் உள்ள குளத்தில் மது போதையில் தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.

லால்குடி எல். அபிஷேகபுரம் மேல தெருவை சேர்ந்தவர் சேகர்(62). அதேபோல் வாளாடி புது ரோடு பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (52). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார்.
இவர்கள் இருவரும் நேற்று இரவு வாளாடி சிவன் கோயில் அருகே உள்ள குளத்தின் கரையில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது மது போதையில் இருந்த இருவரும் குளத்தில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலையில் சேகரின் உடல் குளத்தில் சடலமாக மிதந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் லால்குடி தீயணைப்பு துறைக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த லால்குடி தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து திருநாவுக்கரசு மாயமானதால் சேகரை கொலை செய்து குளத்தில் தள் ளி விட்டிருக்கலாம் என அவருடைய குடும்பத்தினர் சந்தேகப்பட்ட நிலையில் இன்று மாலை திருநாவுக்கரசின் உடல் குளத்தில் சடலமாக மிதந்தது.

பின்னர் லால்குடி போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த லால்குடி போலீசார் மேற்க்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

மது போதையில் குளத்தில் தவறி விழுந்து இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.