லாரி மீது பைக் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

0 189
Stalin trichy visit

திருச்சி, மே 27  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கீழரசூரில் உள்ள திருச்சி அரியலூர் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வந்த மோட்டார் பைக் மோதிய விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர்  தமிழ்ச்செல்வன்(24) . இவர் தனது மோட்டார் பைக்கில் திருச்சி அரியலூர் சாலையில் வந்து கொண்டிருந்தார். அதேபோல் புள்ளம்பாடி அருகே கீழரசூரில் கடலூர் மாவட்டம் முஸ்ணம் தாலுகா நடுத் தெருவைச் சேர்ந்த  பார்த்திபன் (27) தனது லாரியை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது மோட்டார் பைக்கில் வந்த தமிழ்ச்செல்வன் எதிர்பாராத விதமாக நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த கல்லக்குடி போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இந்த விபத்து குறித்து கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.