அரசு மதுபான கடை பாரில் இளைஞர் படுகொலை….
சமயபுரம் அரசு மதுபான கடை பாரில் இளைஞரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி படுகொலை.
திருச்சி மாவட்டம் சமயபுரம் நால்ரோடு பகுதியில் உள்ள அரசு மதுபான கடை பாரில் மது அருந்திக் கொண்டிருந்த இளைஞரை அடையாளம் தெரியாத 3 க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓட்டம். தப்பி ஓடியவர்களுக்கு போலீசார் வலை.

சமயபுரம் அருகே எஸ். கல்லுக்குடியைச் சேர்ந்தவர் மாரியப்பன்.இவரது மகன் 28 வயதான பாபு. இவர் சமயபுரத்தில் மாலை கட்டும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு சமயபுரம் நால்ரோடு பகுதியில் உள்ள அரசு மதுபான கடை பாரில் பாபு மது அருந்தி கொண்டிருந்த போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மூன்றுக்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் பாபுவை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து பாபுவை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறினார். இதனையடுத்து போலீசார் உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசுமருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சமயபுரம் போலீசார் கொலை செய்துவிட்டு தப்பியோடிய குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் இந்த கொள்ளைக்கான காரணம் என்ன முன் விரோதமாக நடந்ததா அல்லது வேறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.