தமிழ்நாட்டில் பிளஸ் 2தேர்வுகள் ரத்தா? – முதல்வர் இன்று அறிவிக்கிறார்
இந்தியாவில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு தேர்வை நடத்துவதா, ரத்து செய்வதா என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மாணவர்களின் நலன் கருதி சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்வது என முடிவு செய்யப்பட்டது.தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை நடத்துவதா, ரத்து செய்வதா என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மத்திய அரசு சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ததால் தமிழகத்திலும் பிளஸ் 2 தேர்வு ரத்தாகும் என்றே தெரிகிறது.இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும்.