தமிழ்வழியில் மாணவர் சேர்க்கை – மேளதாளங்களுடன் ஊர்வலம் நடத்தி அசத்திய ஸ்ரீரங்கம் பள்ளி!
திருச்சி ஸ்ரீரங்கம் கிழக்கு ரங்கா பள்ளியில் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் தமிழ் வழி மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வை வீதிவீதியாக மேளதாளங்களுடன் வந்தனர்.
தமிழ் வழியில் கல்வி பயில்வதால் மாணவர்கள் பெறும் வசதிகள் மற்றும் சிறப்படையும் வாய்ப்புகளையும் கூறினர். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கட்டாய கல்வி மற்றும் இலவச கல்வியும், அழகான உறுதியான கட்டிடத்தில் மாணவர்களுக்கு தனித்தனி வகுப்பறைகள், மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட சுத்தமான குடிநீர் வசதி, மாணவர்கள் அமர டெஸ்க் வசதி, விளையாட்டு திடலில் முறையான விளையாட்டுகளை கற்பித்தல், டிவி தொலைக்காட்சி மூலம் ஆங்கில வகுப்புகள் மாணவர்கள் கற்று தரப்படும் எனவும்,

இப்பள்ளியில் படிப்பதால் பள்ளியில் சேரும் அனைத்து மாணவ மாணவிகளுக்கு விலையில்லா புத்தகம், சீருடை ன, வண்ண மெழுகு பென்சில் வழங்கப்படும் என்றும், கணித உபகரணப்பெட்டி, நில வரைபடங்கள் வழங்கப்படும் என்றும், தினம் சத்தான ஒரு முட்டையுடன் தானிய சுண்டல், உருளைக்கிழங்கு வழங்கப்படும் என்றும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்கு ஒரு ஆசிரியர்,
ஆறு முதல் எட்டாம் வகுப்பு ஒரு பாடத்திற்கு ஒரு ஆசிரியர் என தகுதியான உயர்கல்வி பெற்ற ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கின்றனர் என்று கூறி ஸ்ரீரங்கம் கிழக்கு ரெங்கா நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் வீதி வீதியாக சென்று தாரை தப்பட்டை மேளதாளங்கள் முழங்க தமிழ்வழி கல்வி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
