திருச்சி அரசு மருத்துவமனையில் 400 படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இன்று திருச்சி வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி அரசு மருத்துவமனையில் கூடுதலாக 400 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார். உடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ், மாநிலங்களவை உறுப்பினர் என்.சிவா, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.