முழு பொது முடக்கத்திற்கு வாய்ப்பு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

0 215
Stalin trichy visit

திருச்சியில் கொரோனா கள ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்நம்பிக்கை வைத்து வெற்றி பெற செய்த மக்களுக்கு ஊடகங்கள் வாயிலாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.வாழ்த்து தெரிவிக்க வந்த அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு குறித்தே விவாதித்தேன். கொரோனா தடுப்பு தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.கொரோனா சிகிச்சைகான தகவல்களை பெற வார் ரூம் அமைக்கப்பட்டது.மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதால் தமிழகத்துக்கு கூடுதல் ஆக்சிஜன் கிடைத்தது. 2.7 கோடி ரேஷன் கார்டு தாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள அனைத்து கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் குழு அமைகப்பட்டுள்ளதாக கூறிய ஸ்டாலின் சென்னையை போன்று பிற மாவட்டங்களில் வார் ரூம் அமைக்க யோசித்து வருகிறோம்.தடுப்பூசி, ஆக்சிஜன் ஆகியவற்றை தமிழகத்திலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கை நீடிப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்படும்.ஊரடங்கு மூலம் தொற்று பரவும் வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மே 2-ம் தேதி முதல் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கலைஞர் பிறந்த நாளுக்கு முன்பாக கொரோனா நிவாரணத்தின் 2ம் தவணை ரூ.2ஆயிரம் வழங்கப்படும் என உறுதியாக தெரிவித்த முதல்வர்ஆட்சியமைத்து கடந்த இரு வாரங்களில்16938 படுக்கைகள் கூடுதலாக ஏற்பாடு அமைக்கபட்டுள்ளது. இதில் 7800 ஆக்ஸிஜனுடன் கூடிய படுக்கைகள் ஆகும்.இயற்கை மருத்துவ மையங்கள் 30 திறக்கப்பட்டுள்ளது.நாளொன்றுக்கு239 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் கூடுதலாக பெறப்பட்டுள்ளது.நாளொன்றுக்குதமிழகத்தில் 375 மெட்ரிக் டன் ஆக்சிஜனும் வெளிமாநிலங்களில் இருந்து 100 மெட்ரிக் டன் ஆக்சிஜனும் பெறப்படுகிறது. புதிதாக பல நிறுவனங்கள் மூலம் ஆக்ஸிஜன் உற்பத்தி தொடங்கி உள்ளோம். நாள்தோறும் 1.7 லட்சம் பேருக்கு RTPCR பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. புதிதாக 2100 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.அதேபோல செவிலியர்கள் 6 ஆயிரம் பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு கொரோனா தடுப்பு பணிகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.அனைத்து அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள்கொரோன தடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.அரசு போர்க்கால அடிப்படையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.ஆட்சிக்கு வந்த மகிழ்ச்சியை விட கொரோணா முற்றிலும் ஒழிப்பதே எங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.கொரோனா காலத்தில் பணியின்றி வீட்டிலிருக்கும் ஆசிரியர்களுக்கு ஊதியம் குறைக்கப்படுமா? என்ற கேள்விக்கு வதந்திகளுக்கு பதில் அளிக்க முடியாது என ஸ்டாலின் பதில் அளித்தார்.

 

Leave A Reply

Your email address will not be published.